தற்போது 400+..ஜூன் முதல் வாரத்தில் 175 முதல் 200..நான் அல்போன்சா மாம்பழத்தை பற்றி பேசினேன் : குரேஷி கிண்டல்

டெல்லி : நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவிற்கு எதிர்கட்சிகளான இண்டியா கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக பாஜக நடத்தும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களில், 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம் என்று அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சூளுரைத்து வருகின்றனர். இந்த நிலையில், 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவோம் என்பதை மறைமுகமாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் SY குரேஷி கிண்டல் அடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போது 400+ என்பார்கள். மே மாத இறுதியில் 250க்கு குறையும். ஜூன் முதல் வாரத்தில் 175 முதல் 200க்கு சரிந்துவிடும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழத்தை பற்றி பேசினேன். அனைத்தையும் அரசியலாகப் பார்க்கக்கூடாது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தற்போது 400+..ஜூன் முதல் வாரத்தில் 175 முதல் 200..நான் அல்போன்சா மாம்பழத்தை பற்றி பேசினேன் : குரேஷி கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: