பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி வி.களத்தூர், வேப்பந்தட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு

 

பெரம்பலூர்,ஏப்.6: பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்பேரில் பொது மக்கள் அச்சமின்றி வாக்க ளித்திட வி.களத்தூர், கை. களத்தூர், அன்னமங்கலம், வேப்பந்தட்டை ஆகிய கிரா மங்களில் துணை ராணுவ த்தினருடன், போலீசார் இணைந்து கொடி அணி வகுப்பு நடத்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய துணை ராணுவ மான, மத்திய சேமக் காவல் படையினர்(CRPF) மற்றும் பெரம்பலூர்மாவட்ட காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் நேற்று (5ம் தேதி) நடை பெற்றது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள 18வது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரம்ப லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முழு மையான பாதுகாப்பை நாங்கள் தருகிறோம் என் பதை உணர்த்தும் விதமாக இந்தியத் துணை ராணுவ மும், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் உள் ளூர் போலீசாரும் இணை ந்து நடத்திய கொடிஅணி வகுப்பு நிகழ்ச்சியானது, காலையில் பெரம்பலூர் மாவட்டம்,

வேப்பந்தட்டை தாலுக்கா வி.களத்தூர் மற்றும் கை.களத்தூர் கிரா மப்புற பகுதியிலும் மாலை யில் அன்னமங்கலம் மற் றும் வேப்பந்தட்டை ஆகிய கிராமப்புற பகுதிகளிலும் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பெரம்ப லூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழ கன், மத்திய சேமக் காவல் படை ஏடிஎஸ்பி பிரதக்கரா தருவா, பெரம் பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச்சாமி, மங்களமேடு உட்கோட்ட டிஎஸ்பி தனசேகர், மற்றும் மத்திய சேமக் காவல் படை டிஎஸ்பி ஹேம்ராம் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி வி.களத்தூர், வேப்பந்தட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: