பறக்கும்படை சோதனையில் 797 பட்டுப்புடவைகள் பறிமுதல்

 

ஓமலூர், ஏப்.7: ஓமலூர் அருகே சிக்கம்பட்டி, தொளசம்பட்டி ஆகிய இடங்களில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற 797 புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, தொளசம்பட்டி பகுதியில், பறக்கும் படை அலுவலர் ராணி தலைமையிலான குழுவினர், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காமலாபுரம் பகுதியில் இருந்து நங்கவள்ளிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், விலை உயர்ந்த 139 பட்டு புடவைகள் இருந்தது.

விசாரணையில், காமலாபுரத்தில் கைத்தறியில் நெய்த பட்டுப் புடவைகளை, நங்கவள்ளியில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.5 லட்சம் மதிப்புள்ள 139 பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்து, ஓமலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதே போல, ஓமலூர் அருகே சிக்கம்பட்டி கிராமத்தில் பறக்கும் படை அலுவலர் வடிவேல் தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் பகுதிக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள 658 கோரப்பட்டு புடவைகளை பாலிஷ் போடுவதற்காக கொண்டு சென்ற வாகனத்தை சோதனை செய்தனர்.

The post பறக்கும்படை சோதனையில் 797 பட்டுப்புடவைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: