திருவாடானையில் மத்திய ரிசர்வ் போலீஸ் கொடி அணிவகுப்பு

திருவாடானை, ஏப்.7: உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வரும் ஏப்.19ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் திருவாடானையில் காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த கொடி அணிவகுப்பானது திருவாடானை காவல் எல்லைக்கு உட்பட்ட சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதி, மேல்பனையூர் பாலம், மங்களக்குடி, கடம்பாகுடி, கோவிந்தமங்கலம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலையின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிறைவடைந்தது.இந்த கொடி அணிவகுப்பில் திருவாடானை சப்.இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உட்
பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருவாடானையில் மத்திய ரிசர்வ் போலீஸ் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: