நாகப்பட்டினத்தில் பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

 

கீழ்வேளூர், ஏப். 6: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சி அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயவீரபாண்டியன் மனைவி முனீஸ்வரி (34). இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கீழ்வேளூர் காவல் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளன.

இதுதொடர்பாக முனீஸ்வரி கைது செய்யப்பட்டு திருவாரூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் , துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்க்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து முனீஸ்வரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டதையடுத்து கீழ்வேளூர் போலீசார் திருவாரூர் மகளிர் சிறையில் இருந்த முனீஸ்வரியை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

 

The post நாகப்பட்டினத்தில் பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: