போலீஸ் வளையத்துக்குள் கடலூர் நகரம்

கடலூர், ஏப். 6: கடலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தங்கியுள்ளதால், சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலூர் நகரம் போலீசாரின் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கட்சியின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதன் பிறகு இரவு கடலூரில் தங்கினார். இதன் காரணமாக அவர் தங்கும் இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை கடலூரில் அவர் நடை பயிற்சி மேற்கொண்டு விட்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சிதம்பரம் லால்புரத்துக்கு செல்கிறார். இதன் காரணமாக கடலூரிலிருந்து சிதம்பரம் வரை சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை சிதம்பரத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு மீண்டும் கடலூர் வழியாக புதுச்சேரிக்கு சென்று அங்குள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்குகிறார்.

The post போலீஸ் வளையத்துக்குள் கடலூர் நகரம் appeared first on Dinakaran.

Related Stories: