கயத்தாறில் துணை ராணுவத்தினர் போலீசார் கொடி அணிவகுப்பு

கயத்தாறு, ஏப். 5: கயத்தாறில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல், வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் அறிவுறுத்தலின் படி கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோர் பங்கேற்ற அடையாள கொடி அணிவகுப்பு நடந்தது.காலை 7 மணிக்கு கயத்தாறு காவல் நிலையம் முன் தொடங்கிய அணிவகுப்பு, கயத்தாறு -மதுரை மெயின் ரோடு, கடம்பூர் ரோடு, ஆஸ்பத்திரி தெரு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட கயத்தாறின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இந்த கொடி அணிவகுப்பில் துணை ராணுவம் மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட காவல் நிலைய காவலர்கள் 120க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

The post கயத்தாறில் துணை ராணுவத்தினர் போலீசார் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: