நாம் தமிழரின் கூத்து 25 பேர் கூட இல்ல… பொதுக்கூட்டமாம்… மேடை ஏறாத வேட்பாளர்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அப்சியா நஸ்ரினுக்கு வாக்கு சேகரிக்க காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகில் ேநற்று ‘மாபெரும்’ பொதுக்கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப அக்கட்சி சார்பில் 10க்கும் குறைவான எண்ணிக்கையிலான நிர்வாகிகள் மட்டும் வந்து சீமான் பாணியில் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து ஒருவர் மேடை ஏறி முழங்க தொடங்கினார். ஆனால் மேடையின் கீழே 25 பேர் கூட இல்லாமல் எப்படி மேடை ஏறுவது என்று தயங்கிய வேட்பாளர் மேடை ஏறாமல் கீழே இருந்த 10 பேருடன் சேர்ந்து அமர்ந்து கொண்டார்.ஆனாலும் அந்த கட்சியின் பேச்சாளர் என்று கூறி சரவணன் பேசினார். அவர் சீமானை போலவே கை முஷ்டியை உயர்த்தி சத்தம் போட்டு பேச, அதனை கேட்பதற்கு தான் யாரும் இல்லை.

குறைந்தபட்சம் இதனை வேடிக்கை பார்க்க கூட யாரும் அங்கு இல்லாத நிலையில் பேச்சு மட்டும் தொடர்ந்தது. அப்போது அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மிஸ்டர் பொதுஜனம், ‘அவங்க பேச்சை கேட்க ஆளே இல்லை. ஆளே இல்லாத கடையில யாருக்கப்பா இப்படி சத்தமா டீ ஆத்துறாரு… என்று கூறி இவங்க எங்க ‘மைக்’கை புடிச்சி, வீதி, வீதியா போயி ஓட்டுக்கேளுங்க…’ என்று நக்கலாக சிரித்தபடியே நகர்ந்தனர்.

The post நாம் தமிழரின் கூத்து 25 பேர் கூட இல்ல… பொதுக்கூட்டமாம்… மேடை ஏறாத வேட்பாளர் appeared first on Dinakaran.

Related Stories: