முதலமைச்சர் முடிவு செய்யும் சிறப்புக்குழுவே மாநில ஆளுநரை தேர்வு செய்யும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 

புது டெல்லி: முதலமைச்சர் முடிவு செய்யும் சிறப்புக்குழுவே மாநில ஆளுநரை தேர்வு செய்யும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. .இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மக்கள் மீதான டிஜிட்டல் கண்காணிப்பு நீக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதில்

100 நாள் வேலைத்திட்டத்துக்கு இரு மடங்கு நிதி

100 நாள் வேலைத்திட்டத்துக்கு இருமடங்கு நிதி ஒதுக்கீடு; பொது விநியோக திட்டத்தை மேலும் பலப்படுத்த நடவடிக்கை.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

சாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

பணப்பரிவர்த்தனை சட்டங்கள் ரத்து

யு.ஏ.பி.ஏ. பணப்பரிவர்த்தனை சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

 

The post முதலமைச்சர் முடிவு செய்யும் சிறப்புக்குழுவே மாநில ஆளுநரை தேர்வு செய்யும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் appeared first on Dinakaran.

Related Stories: