வீட்டு வேலைக்காரர்களை கட்சி நிர்வாகியாக வைத்துள்ளார் ஜி.கே.வாசன்: நாங்க வேணாம்னு அவுத்து போட்ட கோவணம்தான் பாமக; வைகைச்செல்வன் அதிரடி

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜசேகரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நேற்று திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார வேனில் நின்றபடி அவர் பேசியதாவது: இன்றைக்கு அதிமுகவை எதிர்த்து திமுக கூட்டணியும், பாஜ கூட்டணியும் போட்டியிடுகின்றனர். பாஜ கூட்டணியில் உள்ள ஜிகே வாசன் அவரது வீட்டு வேலைக்காரர், சமையல்காரர்களை கட்சி நிர்வாகியாக வைத்துள்ளார். அவருக்கு மூன்று சீட்டு கொடுத்துள்ளனர். எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் அவிழ்த்து போட்ட கோவணம்தான் பாமக. இது இன்று அண்ணாமலை கழுத்திலும், மோடி கழுத்திலும் பட்டு அங்கவஸ்திரமாக மின்னிக் கொண்டிருக்கிறது. இப்படி விலை போகாத நபர்களை வைத்து இந்த கூட்டணி தேர்தலுக்கு ஓட்டு கேட்டு உங்களிடம் வருகிறது. நான் பாஜவினரை பார்த்து சொல்வதெல்லாம் ‘துமாரா டால் மே தமிழ்நாடு மே நை சல்த்தா ஹே’. அப்படின்னா உங்க பருப்பு இங்கே வேகாதுன்னு அர்த்தம் என்றார். இதனிடையே வைகைச் செல்வன் பேசும்போது பாமகவினரும், பாஜவினரும் தங்களது வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு அங்கு பிரசாரம் செய்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் இரு தரப்பையும் தனியாக பிரித்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

The post வீட்டு வேலைக்காரர்களை கட்சி நிர்வாகியாக வைத்துள்ளார் ஜி.கே.வாசன்: நாங்க வேணாம்னு அவுத்து போட்ட கோவணம்தான் பாமக; வைகைச்செல்வன் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: