பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேச்சு

சென்னை: பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ரூ.50,000 மேல் பணம் எடுத்துச் செல்ல வணிகர்கள் அனுமதி கோரிய கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடிக்கு வெளியே பந்தல், நாற்காலிகள் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதற்றமான அனைத்து வாக்குச்சாவடிகளிளும் துணை ராணுவப் படையினர் பணியில் இருப்பார்கள். கண்காணிப்பு குழுக்கள் 906ஆகவும், பறக்கும் படை 893 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.

The post பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: