மின்னணு வாக்கு இந்திரங்கள் மீதான சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; வரும் மக்களவை தேர்தலுக்கு புதிய சரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையால் 2% தவறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். வாக்கு இயந்திரங்களில் 2ஜி தொழில்நுட்பத்துடன் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்றக் கோரி திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

பழைய நடைமுறையை இந்த தேர்தலிலும் பின்பற்றக் கோரி திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. 3-வது தலைமுறை வாக்கு இயந்திரங்களை அறிமுகம் செய்யும் தேர்தல் ஆணையம், அதில் உள்ள பிரச்சனைகளை ஏன் சரிசெய்யவில்லை?. 22 லட்சம் வாக்குகளில் 46,000 வாக்குகளில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. வாக்கு இயந்திரங்கள் தயாரிக்கப்படும் இடங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

2% வாக்குகளில் வித்தியாசம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றால் அது சீர்செய்யப்பட வேண்டும். 17சி விண்ணப்பம் மற்றும் இயந்திரத்தில் உள்ள தகவல் ஒன்றாக இருக்க வேண்டும். மின்னணு வாக்கு இந்திரங்கள் மீதான சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை இவ்வாறு கூறினார்.

The post மின்னணு வாக்கு இந்திரங்கள் மீதான சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: