திருக்கானூர் கரும்பஸே்வரர் கோயிலில் சூரிய பூஜை

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.3: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் சவுந்தர்யநாயகி அம்மன் உடனுறை கரும்பேஸ்வரர் கோயிலில் சூரியதேவன் இறைவனை பூஜிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி அடுத்த விஷ்ணம்பேட்டை கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருக்கானூர் கரும்பேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். மேலும் திருக்காட்டுப்பள்ளி, திருநேமம், திருச்சினம்பூண்டி, திருக்கானூர், திருபுதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை ஆகிய 7 சிவாலயங்கள் இணைந்து சப்தஸ்தான (ஏழூர்) திருவிழா நடந்த சிவாலயம் என்ற சிறப்புடையதாகும்.

இங்கு ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் சூரியதேவனின் கிரணங்கள் (ஒளி) காலை 6மணிமுதல் 6.30 வரை சிவபெருமான் மீது விழும். இதனை சூரிய பூஜையாக கொண்டாடப்படுகிறது. நேற்று அதிகாலை சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு சுவாமி மீது சூரிய ஒளி பரவிய போது பக்தர்கள் பரவசத்துடன் இறைவனை தரிசனம் செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

The post திருக்கானூர் கரும்பஸே்வரர் கோயிலில் சூரிய பூஜை appeared first on Dinakaran.

Related Stories: