தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடி,ஏப்.3: தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் பங்காரு அடிகளாரின் 84வது அவ‌தார பெருமங்கல விழாவை முன்னிட்டும், இயற்கை வளம் செழிக்கவேண்டியும் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. தூத்துக்குடி 3வது மைல் அருகேயுள்ள திருவிக நகர் சக்திபீடத்தில் பங்காரு அடிகளாரின் 84வது அவ‌தார பெருமங்கல விழா நடந்தது. இயற்கை பேரிடரில் மக்களை காக்கவும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ- மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து கல்வி அறிவு சிறக்கவும், தொழில்வளம் சிறக்கவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. இப்பூஜையை ஆதிபராசக்தி சித்தர்பீட மத்திய வேள்விக்குழு தலைவர் கோபு தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவர் சக்திமுருகன் சக்தி கொடியை ஏற்றினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கலை மத்திய கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கந்தசாமி துவக்கிவைத்தார். நிகழ்ச்சிகளில் ஆன்மிக இயக்க துணைத் தலைவர் பண்டார முருகன், பொருளாளர் கண்ணன், வேள்விக்குழு கிருஷ்ணநீலா, பிரச்சாரம் முத்தையா, இளைஞர் அணி செல்லத்துரை, திருச்சி மாவட்ட வேள்வி பொறுப்பாளர் முத்துக்கண்ணு, வட்டத் தலைவர்கள் செல்வம், அழகர்சாமி, தினேஷ், சக்திபீட இளைஞர் பொறுப்பாளர்கள் திருஞானம், அனிதா, அகிலா, புவனேஸ்வரி, ஜெயராமன், மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சக்திபீட துணைத் தலைவர் திருஞானம் செய்திருந்தார்.

The post தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: