கொல்லம் தொகுதி வேட்பாளர் நடிகர் முகேஷுக்கு ரூ.14.98 கோடி சொத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் கொல்லம் தொகுதியில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிடும் நடிகரும், தற்போதைய எம்எல்ஏவுமான முகேஷ் உள்பட 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நடிகர் முகேஷ் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் வருமாறு: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சேர்த்து மொத்தம் ரூ.14.98 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. சென்னை தியாகராய நகரில் நடிகர் முகேஷ் மற்றும் அவரது முதல் மனைவி நடிகை சரிதா ஆகியோரின் பெயரில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இரண்டாவது மனைவி தேவிகா மற்றும் அவரது பெயரில் திருவனந்தபுரத்தில் 13 சென்ட் நிலம் உள்ளது. மகாபலிபுரம் மற்றும் கேரளாவிலுள்ள சக்திக்குளங்கரை, தோன்னக்கல் மற்றும் போத்தன்கோடு ஆகிய இடங்களில் நிலங்கள் உள்ளன. பிஎம்டபிள்யூ உள்பட 2 கார்கள் உள்ளன.

The post கொல்லம் தொகுதி வேட்பாளர் நடிகர் முகேஷுக்கு ரூ.14.98 கோடி சொத்து appeared first on Dinakaran.

Related Stories: