அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பண்ணாரி அம்மன் ஊர்வலம்

சத்தியமங்கலம், மார்ச்29: சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் புஷ்பரத ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு வகையான மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளினார். கோவில் வளாகத்தில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தொடங்கிய ஊர்வலம் கோவிலை சுற்றி அமைந்துள்ள பவானிசாகர் சாலை, சோதனை சாவடி, சத்தியமங்கலம் – மைசூர் சாலை வழியாக கோயிலை சுற்றி புஷ்பரதம் ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க நடைபெற்ற புஷ்பரத ஊர்வலத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மேனகா தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், புஷ்பலதா கோதண்டராமன், அமுதா, பூங்கொடி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பண்ணாரி அம்மன் ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: