அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: நாளை மறுநாள் பரப்புரையை தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தேமுதிக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை முதல் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 29ம் தேதி நீலகிரியில் தனது பரப்புரையை தொடங்குகிறார். மார்ச் 29-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி பிரசாரத்தை நிறைவு செய்கிறார். 29ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். 30ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். 31ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கள்ளக்குறிச்சி விழுப்புரம் சிதம்பரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ஏப்.1ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பெரம்பலூர் புதுக்கோட்டை திருச்சி பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார். 2ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை திருவண்ணாமலை வேலூர் அரக்கோணம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 3,4ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திருவள்ளூர் (தனி), காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். 5,6ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 7,8ம் தேதிகளில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கடலூர் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

9,10ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். 11ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 12ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், பகுதிகளில் பரப்புரை செய்கிறார். 13ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கரூர், நாமக்கல், தேனி பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை (17ம் தேதி 6 மணி வரை) மதுரை, தென்காசி, விருதுநகர் பகுதிகளில் பரப்புரை செய்கிறார்.

The post அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: நாளை மறுநாள் பரப்புரையை தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த் appeared first on Dinakaran.

Related Stories: