பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைசுழற்சி முறையில் அலுவலர்கள் நியமனம்

 

பெரம்பலூர்,மார்ச்27: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்டக் கலெக்டர் கற்ப கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தலின் படி, நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 16 ஆம்தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப் பாட்டு அறை அமைக்கப் பட்டு செயல்பட்டு வருகின் றது.

இந்த கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறை யில் அலுவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். எனவே, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டண மில்லா தொலைபேசியி லும், 04328-299166 299188, 299492, 299433,299255 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் தேர் தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை cVIGIL என்ற மொபைல் செயலியில் புகைப்படமாக வும், வீடியோவாகவும் ஆடி யோவாகவும் பதிவேற்றம் செய்து தெரிவிக்கலாம். இந்த செயலியில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக் கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைசுழற்சி முறையில் அலுவலர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: