பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி

 

பெரம்பலூர்,மார்ச்.27: நாடாளுமன்றத் தேர்தல்- வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று(27ஆம்தேதி) கடைசி நாள். பெரம்பலூர் பாராளு மன்றத் தொகுதியில் 57 வேட்பு மனுக்கள் விநியோ கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 28பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 18 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தமிழகத் தில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல்ஆணையத் தால் கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலையொட்டி கடந்த 20 ம்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

மனுதாக்கல் செய்ய இன்று(27ம்தேதி) கடைசி நாளாகும். நாளை (28ம் தேதி) வேட்பு மனுக்கள் பரிசீ லனை நடைபெறுகிறது. 30ம் தேதி வேட்பு மனுக்க ளை திரும்பபெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய 20,21 தேதிகளில் யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், 22ம்தேதி திமுக வேட்பாளர் கே.என். அருண்நேரு (4), திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளரான வைரமணி (2)என முதல்நாளில் 6 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

23, 24 விடுமுறை தினங்களுக்கு பிறகு 25ம் தேதி திங்கட் கிழமை அதிமுக சார்பாக (3), ஐஜேகே கட்சி சார்பாக பாரிவேந்தர்(1), ரவி பச்ச முத்து(1) நாம் தமிழர் கட்சி சார்பாக(1) என 6 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டிருந்தன. இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவிக்காக போட்டியிட விரும்புவோர் மனு தாக்கல் செய்ய ஏது வாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(26ம்தேதி) மாலை வரை 57 வேட்பு மனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (26ம் தேதி) ஒரே நாளில் 16பேர் வேட்பு மனுக் களைத் தாக்கல் செய்தனர். இதன்படி நேற்றுவரை பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு 28பேர் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய் துள்ளனர். இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யக் கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி appeared first on Dinakaran.

Related Stories: