கல்லம்பட்டி முருகன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்

சிங்கம்புணரி, மார்ச் 26: சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டியில் சக்தி முருகன் கோயில் பங்குனித் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவினை முன்னிட்டு சுவாமிக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் பங்குனித் திருவிழாவினை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி, கல்லம்பட்டி, சூரக்குடி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டது.

முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் கட்டுமாடுகள் ஆங்காங்கே வயல்வெளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அவிழ்த்து விடப்பட்ட காளைகளை இளைஞர்கள் லாவகமாக விரட்டி பிடித்தனர். இதில் ஒரு சில காளைகள் மட்டுமே பிடிபட்டது. பெரும்பாலான காளைகள் போக்கு காட்டி ஓடியது. இந்த மஞ்சுவிரட்டை ஏராளமான பொதுமக்கள் பெண்கள் கண்டு ரசித்தனர்.

The post கல்லம்பட்டி முருகன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள் appeared first on Dinakaran.

Related Stories: