ராட்சத பலூன் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு

 

ஈரோடு,மார்ச்23: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, ராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கலெக்டர் அலுவலக மேல் தளத்தில், ‘தேர்தல் நாள் ஏப்ரல் 19, 2024, அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா’என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

10 அடி சுற்றளவு, 10 அடி உயரம் கொண்ட ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனை வானில், 150 அடி உயரத்தில் பறக்கவிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணீஷ், பயிற்சி உதவி கலெக்டர் வினய்குமார் மீனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா, தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ராட்சத பலூன் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: