திருமருகலில் மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

 

நாகப்பட்டினம், மார்ச்22: நாகப்பட்டினம் மகளிர் திட்டம் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி திருமருகலில்நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் குறித்த மெஹந்தி வரைதல் மற்றும் கோலம் போடுதல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கடைத்தெரு, பஸ் நிலையம் வழியாக திருமருகல் அரசு மருத்துவமனை அருகில் உள்ள நூலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியை மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் காமராஜ், இந்திராணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியில் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் அறிவுநிதி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சுய உதவிக்குழு பயிற்றுனர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். ஜனநாயக கடமையாற்ற பணம் பெற கூடாது. எதிர்கால இந்தியாவை வலு பெற அனைவரும் வாக்களிப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பாதாகைகளை ஏந்திச் சென்றனர்.

The post திருமருகலில் மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: