திருச்சானூரில் 2ம் நாள் பிரமோற்சவம்: அன்ன வாகனத்தில் வந்து பத்மாவதி தாயார் அருள்

திருமலை: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் 2ம் நாள் பிரமோற்சவத்தில் அன்ன வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதை்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 2வது நாளான நேற்று காலை 7 தலைகள் கொண்ட பாம்பின்மீது பெரிய சேஷ வாகனத்தில் மகாவிஷ்ணு அலங்காரத்தில் வைகுண்ட நாதனாக பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்றிரவு அன்ன வாகனத்தில் அருள்பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், கோயிலுக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீதியுலா ரத்து செய்யப்பட்டாலும் பத்மாவதி தாயாரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வாகன சேவையில் கோயில் ஜீயர்கள், சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கர், இணை செயலதிகாரி வீரபிரம்மன், கோயில் அதிகாரிகள் கஸ்தூரிபாய், பிரபாகர்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

The post திருச்சானூரில் 2ம் நாள் பிரமோற்சவம்: அன்ன வாகனத்தில் வந்து பத்மாவதி தாயார் அருள் appeared first on Dinakaran.

Related Stories: