நடிகர் மன்சூர் அலிகான் கட்சி அலுவலகத்தில் லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப் திருட்டு: சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரணை

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் கட்சி அலுவலகத்தில் இருந்த லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப், மடிக்கணினி திருடுபோனதாக மன்சூர் அலிகான் புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் மன்சூர் அலிகான் அ.தி.மு.க.வுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கடந்த 13ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் கடந்த 15ம் தேதி அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கினார். இதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான்; இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச் செயலாளர் ஆக குன்றத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் தான் உள்ளார். சகோதரர் கண்ணதாசன் ஆபிஸ் பாயாக வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்த லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப், மடிக்கணினி திருடுபோனதாக நடிகர் மன்சூர் அலிகான் புகார் அளித்துள்ளார். அலுவலக பொருட்களை கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் திருடிவிட்டதாக மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் புகாரின்பேரில் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

The post நடிகர் மன்சூர் அலிகான் கட்சி அலுவலகத்தில் லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப் திருட்டு: சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: