குறைதீர் கூட்டம் ரத்து: பொதுமக்கள் ஏமாற்றம்

 

மயிலாடுதுறை, மார்ச்19: கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறாததால் பொதுமக்கள் மனுக்களை புகார் பெட்டியில் போட்டுச் சென்றனர். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேதி அறிவிக்கும் வரை இக்கூட்டங்கள் நடைபெறாது என்று மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி அறிவித்திருந்தார். இருப்பினும் இதுபற்ற அறியாத கிராமப்புற மக்கள் நேற்று திங்கள் கிழமை என்பதால் மனுக்கள் கொடுப்பதற்கு கலெக்டர் அலுவலகத்திற்கு குவிந்தனர். அலுவலக வாயிலில் பணியில் இருந்த போலீசார் மற்றும் அலுவலர்கள் தடுத்து நிறுத்தி விபரங்களை கூறி மனுக்களை அதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். கலெக்டரை நேரடியாக சந்திக்க முடியாததால் மக்கள் ஏமாற்றத்துடன் மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

The post குறைதீர் கூட்டம் ரத்து: பொதுமக்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: