திருக்கழுக்குன்றம் 10வது வார்டில் ரூ.38 லட்சத்தில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் பணி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் 10வது வார்டில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பேரூராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு ஜாகீர் உசேன் தெரு மலை மீது சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

இதுவரை முறையான சாலை வசதி இல்லாததால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில், மலை மீது வசிக்கும் மக்களின் சிரமத்தை போக்கும் வண்ணம் அப்பகுதியில் சாலை அமைக்க வேண்டுமென்றும், அதேப்போல் சங்கு தீர்த்த மேற்கு குளக்கரை தெருவில் கழிவுநீர் கால்வாயுடன் புதிய சாலை அமைக்க வேண்டுமென்றும் 10வது வார்டு கவுன்சிலர் தௌலத் பீ, பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து, ஜாகீர் உசேன் தெரு மலை மீது சிமென்ட் சாலை அமைக்க ரூ.12.3 லட்சமும், சங்கு தீர்த்த குளக்கரை பகுதியில் கழிவுநீர் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்க ரூ.26 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இப்பணிகளை நேற்று பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் மற்றும் கவுன்சிலர் தௌலத் பீ ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். அப்போது முன்னாள் கவுன்சிலர் ஷெரீப் மற்றும் அகமது பாஷா, அசரப் அலி, சீனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post திருக்கழுக்குன்றம் 10வது வார்டில் ரூ.38 லட்சத்தில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் பணி appeared first on Dinakaran.

Related Stories: