10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மவுண்ட்பார்க் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

*தாளாளர் மணிமாறன் நினைவு பரிசு வழங்கினார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 பொதுத்தேர்வில் கணிதத்தில் 7 மாணவர்களும், இயற்பியலில் 5 மாணவர்களும், கணினி அறிவியலில் 9 மாணவர்கள் என மொத்தம் 21 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் 60 மாணவர்களும், அறிவியலில் 19 மாணவர்களும், சமூக அறிவியலில் 6 மாணவர்கள் என மொத்தம் 85 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

10 மற்றும் 12ம் வகுப்பில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த 106 மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசுகையில், நமது பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 9 முறை மாவட்ட அளவில் உயர்ந்த மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளோம். மேலும் 300க்கும் அதிகமான மருத்துவர்களையும், 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொறியாளர்களையும் உருவாக்கியுள்ளோம். பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கைக்கு 25 முதல் 100 சதவிதம் வரை கல்வி, விடுதி, பேருந்து கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

மேலும் மாணவர்கள் பொதுத்தேர்வில் முழு மதிபெண்கள் பெற சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு சிறந்த முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அவர்களுடன் இணைந்து நீங்கள் படித்ததால் இங்கு அமர்ந்து இருக்கும் மாணவர்கள் அனைவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற முடிந்தது. எனவே, மவுண்ட்பார்க் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நிச்சியம் வாழ்க்கையில் சாதிக்கலாம்.

மேலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் மென்மேலும் சாதிக்க வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்தார். அதனை தொடர்ந்து 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் மணிமாறன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி சீனியர் முதல்வர் கலைச்செல்வி, மவுண்ட்பார்க் ஸ்பெஷல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முத்துக்குமரன், துணை முதல்வர் வினோதினி, பொறுப்பாசிரியர் மணிகண்டன் ஆகியோர்
உடன் இருந்தனர்.

The post 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மவுண்ட்பார்க் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: