சில்லிபாயின்ட்..

* வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் டன்ஸிம் ஹசன் சாகிப் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹசன் மகமூத் சேர்க்கப்பட்டுள்ளார்.

* 2வது ஒருநாள் போட்டியின்போது காயம் அடைந்த இலங்கை அணி வேகப் பந்துவீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா, வங்கதேச தொடரில் இருந்து விலகியுள்ளார். ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ள அவர், சில முதற்கட்ட லீக் ஆட்டங்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைட்டட் – முல்தான் சுல்தான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இப்போட்டி இரவு 9.30க்கு தொடங்குகிறது. நேற்று முன்தினம் நடந்த 2வது எலிமினேட்டர் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸல்மி அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. பெஷாவர் 20 ஓவரில் 185/5 (சைம் அயூப் 73, முகமது ஹாரிஸ் 40); இஸ்லாமாபாத் 19 ஓவரில் 189/5 (கப்தில் 34, இமத் வாசிம் 59*, ஹைதர் அலி 52*).

* ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 12-21, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

The post சில்லிபாயின்ட்.. appeared first on Dinakaran.

Related Stories: