சங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

விராலிமலை.மார்ச் 16: சங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. விராலிமலை அருகே உள்ள விராலூர் ஊராட்சி, சங்கம்பட்டி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு நடைபெற்றது. பேரணிக்கு தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர்கள் மோகனப் பிரியா, சரவணகுமார் முன்னிலை வகித்தனர். சங்கம்பட்டி குடியிருப்பு பகுதி மற்றும் முத்தம் பட்டி குமராடி நத்தம், சட்டு குப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இதையடுத்து இப்பள்ளியில் புதிதாக 16 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இது குறித்து கூறிய தலைமையாசிரியை ராஜேஸ்வரி தொடர்ந்து விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

 

The post சங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: