குளித்தலை அருகே வலையப்பட்டியில் வங்கி ஊழியர் வீட்டில் 7 பவுன், A2 லட்சம் கொள்ளை

 

குளித்தலை, மார்ச்16: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வளையப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் வெற்றிவேல் (53). இவர் பணிக்கம்பட்டியில் உள்ள வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வெற்றிவேல் தனது மனைவி காமாட்சி மற்றும் 2 மகளுடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். பிறகு நேற்று அதிகாலை 4 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டை திறந்து உள்ளே நுழைந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததும் வீட்டில் இருந்த மூன்று பீரோக்கள் திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பிறகு பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் 2 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. பதறிப்போன வெற்றிவேல் குளித்தலை காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். அதையடுத்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். சோளம் பயிர் செய்து 110 நாள் முதல் 120 நாட்களுக்குள் பயன் தரக்கூடிய புல் இனம் சில சோளங்கள்தானாக முளைக்கும். சில சோள ரகங்கள் சேர்க்கையாக பயிர் செய்யப்படுகிறது. நாட்டுச் சோளம் ஒட்டு இன சோளத்தை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post குளித்தலை அருகே வலையப்பட்டியில் வங்கி ஊழியர் வீட்டில் 7 பவுன், A2 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: