பந்தலூர் அருகே காசநோய் விழிப்புணர்வு முகாம்

 

பந்தலூர், மார்ச் 15: பந்தலூர் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியில் பொதுமக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில் பந்தலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஆல் த சில்ரன், ஏகம் பவுண்டேசன் ஆகியன சார்பில் நடைபெற்ற முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

அத்திக்குன்னா எஸ்டேட் மருந்தாளூனர் முரளிதரன், ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் பந்தலூர் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் காசநோய் குறித்தும், பரவும் விதங்கள், காசநோய் தடுப்பு முறைகள், மருத்துவ முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.

பந்தலூர் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் காசநோய் பரிசோதனைகள், எக்ஸ்ரே எடுத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

The post பந்தலூர் அருகே காசநோய் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: