திமுக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியம் மாளிவாக்கம் ஊராட்சி கெங்கையாடிக் குப்பம் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆலோசனைப்படி சோழவரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் நா.செல்வசேகரன் தலைமையில் நடந்தது. இதில் தலைமை திமுக பேச்சாளர் சேலம் சுஜாதா, முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசின் சாதனைகளைப் பற்றி விளக்கி பேசினர்.

இதேபோல் சோழவரம் அடுத்த காரனோடை பஜாரில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றியக்குழு துணை தலைவருமான வே.கருணாகரன், ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை அமைப்பாளர் கவிஞர் நன்மாறன், மாதவரம் தொகுதி திமுக பார்வையாளர் டாக்டர் சந்திரபாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

The post திமுக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: