ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் சுடுகாட்டு பகுதிக்கு பாதுகாப்பு சுற்றுசுவர் அமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பழைய ஜோலார்பேட்டை பொட்டிகான் பள்ளம் பகுதியில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பழைய ஜோலார்பேட்டை பகுதியில் இறக்கும் நபர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சுடுகாட்டுப் பகுதிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் சுற்று சுவர் எழுப்பி உள்ளனர். ஆனால் அவை சிதலமடைந்து இடிந்து விழுந்து உள்ளது. பின்னர் மீண்டும் சுற்றுச்சூழல் எழுப்பப்படாமல் சுடுகாடு திறந்த வெளியாக இருந்து வருகிறது.

இதனால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்துவிட்டு சென்ற பின்னர், புதைக்கப்பட்ட இடத்தில் நாய்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவை கிளறி சேதப்படுத்துகிறது. இதனால் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திறந்த வெளியில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு சுற்றிலும் பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் சுடுகாட்டு பகுதிக்கு பாதுகாப்பு சுற்றுசுவர் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: