அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

புதுடெல்லி: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அனைத்தும் வீடியோ ஆதாரமும் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதங்களை முன்வைத்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, சுரேஷ் பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்த ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல், அமித் ஆனந்த் திவாரி மற்றும் குமணன், ”அங்கித் திவாரியை பொருத்தமட்டில் அவர் லஞ்சம் வாங்கியதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது. வேண்டுமென்றால் அங்கித் திவாரி வழக்கை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடத்தலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து திபதிகள்,”இந்த பிரச்சனையில் குற்றம் செய்தவர்கள் தப்பித்து விடக்கூடாது என்று நீதிமன்றம் நினைக்கிறது. இருப்பினும் வழக்கை வரும் 20ம் தேதி விரிவாக விசாரிக்கிறோம். இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் கேட்டு அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மேலும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க கூடாது என்று நாங்கள் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை என உத்தரவிட்டனர்.

The post அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: