ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.34 கோடியில் பல்வேறு நலத்திட்ட பணிகள்: சா.மு.நாசர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.34 கோடியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை சாமு நாசர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமையில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட தொகுதி நிதி மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் பொது கல்வி நிதியின் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகளின் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சா.மு.நாசர் எம்எல்ஏ பேசுகையில், தேர்தலில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுகிறது. மேலும், சுமார் 10 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த பணிகளும் தற்போது நிறைவேற்ற பூமி பூஜையிட்டு தொடங்கி வைக்கப்படுகிறது என பேசினார். இதனை தொடர்ந்து,

1. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அண்ணா நகர் 21வது வார்டு பகுதியில் புதிதாக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி.

2. கவரப்பாளையம் 22வது வார்டில் புதிதாக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி.

3. ராமலிங்கபுரம் 29வது வார்டில் புதிதாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டும் பணி.

4. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அண்ணா நகர் 14வது வார்டு பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டும் பணி.

5. காமராஜர் நகர் 39வது வார்டு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

6. கல்வி நிதியிலிருந்து காமராஜர் நகர் 39வது வார்டில் ரூ.24.50 லட்சத்தில் மதிப்பீட்டில் நடுநிலைப்பள்ளியில் புதிதாக முதல் தலம் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள்.

இவ்வாறு மொத்தம் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் ஜி.உதயகுமார், மண்டல தலைவர்கள் ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், பொன் விஜயன், துர்கா பிரசாத், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.34 கோடியில் பல்வேறு நலத்திட்ட பணிகள்: சா.மு.நாசர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: