தொகுதி பங்கீடு தொடர்பாக ஜி.கே.வாசனுடன் ஒன்றிய அமைச்சர் சந்திப்பு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுச்செயலாளர் ராஜம் எம்பி நாதன், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், மாநில நிர்வாகிகள் சக்திவடிவேல், மனோகர் பாஷா, மாநில செயலாளர் என்டிஎஸ் சார்லஸ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், ஆயிரம் விளக்கு பரத், திருச்சி குணா, லூயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி: பாஜவுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது கூட்டணிக்கு பலம். ஒத்த கருத்துடையவர்கள் ஒருங்கிணைந்து பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவது உறுதி. மேலும் ஒன்றிய சுற்றுலாதுறை அமைச்சர் கிஷன் ரெட்டி பாஜ பார்வையாளராக சென்னை வந்தார். அவருடன் அரவிந்த் மேனன், நயினார் நாகேந்திரன், கருநாகராஜ் ஆகியோரும் தாமக அலுவலகம் வந்தனர். மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.

இது கூட்டணிக்கு பலம் சேர்க்கிறது. ஓரிரு நாட்களில் உடன்பாடு சுமுகமான முறையில் எட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார். பாஜ கூட்டணியில் தாமக இணைந்துள்ள நிலையில் தமகாவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது, எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது ெதாடர்பாக பேச்சுவார்தை நடத்துவதற்காக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது திருநெல்வேலி, மயிலாடுதுறை, ஈரோடு ஆகிய தொகுதிகளை தமாகவுக்கு ஒதுக்கும்படி ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தொகுதி பங்கீடு தொடர்பாக ஜி.கே.வாசனுடன் ஒன்றிய அமைச்சர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: