மகளிர் பிரீமியர் லீக்: 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி திக்.. திக்.. வெற்றி: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது

டெல்லி: மகளிர் பிரீமியர் லீக் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

நேற்று நடைபெற்ற 17வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. லானிங் 26 ரன்களும், ஷஃபாலி வர்மா 23 ரன்களும், அதிரடியாக விளையாடிய ரோட்ரிக்ஸ் 58 ரன்களும், ஆலிஸ் கேப்ஸி 48 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய பெங்களூரு அணி தொடக்கத்திலே சறுக்கியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 ரன்களில் வெளியேறினார். எல்லிஸ் பெர்ரி 49 ரன்களும், சோஃபி டெவின் 26 ரன்களும் எடுத்தனர். கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19.5வது பந்தில் சிக்ஸர் ரிச்சா கோஷ் விளாசினார். 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பந்தை அடித்த ரிச்சா கோஷ் ரன் அவுட் ஆனார். இதன் மூலம் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் 8 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். மும்பை, டெல்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. குஜராத் அணியை தவிர மற்ற அணிகள் 7 போட்டிகள் விளையாடி முடிந்துவிட்டன. பரபரப்பான கட்டத்தை நோக்கி தொடர் சென்றுள்ளது.

The post மகளிர் பிரீமியர் லீக்: 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி திக்.. திக்.. வெற்றி: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது appeared first on Dinakaran.

Related Stories: