மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித்தேர்வு

திருச்சி, மார்ச் 8: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வுக்கான மாதிரித்தேர்வில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம், என்.ஆர். ஐஏஎஸ் அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் ஆகியன இணைந்து டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு மாதிரி தேர்வுகள் வரும் மார்ச் 11ம் தேதி நடத்தப்பட உள்ளது. மாவட்ட மைய நூலகத்தில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை தேர்வுகள் நடைபெறும்.

மாதிரித்தேர்வில் 9ம் வகுப்பு சமூக அறிவியல், டிச.2023ம் மாத நடப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கணிதம் (மீ.பெ.வ, மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம் (HCF -LCM, Ratio&Proporation) ஆகிய பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். இந்த மாதிரித்தேர்வில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் கிடையாது. வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர்- விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும்.

மாதிரித்தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அதிகரிக்க தேவையான அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும். டிஎன்பிசி குரூப்4 தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித்தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: