அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால அறிவியல் பயிற்சி

திருச்சி, மே 8: திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது. திருச்சி ஏர்போா்ட் அருகே கொட்டப்பட்டு பகுதியில் அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் அமைந்துள்ளது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பல்வேறு அறிவியல் தொடர்பான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டு தோறும் பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறுவதும் வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு கோடை விடுமுறையைத் தொடர்ந்து கோடைகால அறிவியல் முகாம் மே 21ம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

பள்ளி மாணவ, மாணவியர்களில் 5 முதல் 9ம் வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கான இப்பயிற்சி முகாமில் முதலில் சேர்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பங்கேற்கலாம். இம்முகாமில் வானவியல், வேதியல், இயற்பியல், மின்னணுவியல், ரோபாட்டிக்கியல், ஓரிகாமி, யோகா உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கவுள்ளனர். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 04312332190, 2331921 என்ற கோளரங்க தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என கோளரங்க திட்ட இயக்குநர் அகிலன் தெரிவித்துள்ளார்.

The post அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால அறிவியல் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: