காட்டுப்புத்தூர் பகுதியில் பலத்த மழை; சூறைக்காற்றில் வாழை மரங்கள் சாய்ந்தது

தொட்டியம், மே 6: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நேற்று மாலை திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது வயல்வெளியில் இருந்த மரங்கள் மற்றும் வாழை மரங்கள் வேருடன் சாய்ந்து சேதமானது. தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதலே சுட்டெரிக்கும் வெயிலால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அனல் வீசும் வெப்பக்காற்றால் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு அஞ்சி வீடுகளிலேயே முடங்கினர்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் திடீரென வானில் கரு மேகங்கள் சூழ்ந்தது. சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற்கூரை பறந்து சென்றது. அப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. இது தவிர வயல் வெளியில் வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் வாழை சேதம் மதிப்பு தெரியவில்லை.

The post காட்டுப்புத்தூர் பகுதியில் பலத்த மழை; சூறைக்காற்றில் வாழை மரங்கள் சாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: