ராஜபாளையம் தொகுதியில் ரூ.13 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்

ராஜபாளையம், மார்ச் 7: ராஜபாளையம் தொகுதியில் ரூ.13 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். ராஜபாளையம் தொகுதியில் சேத்தூர் பேரூராட்சியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் வாழவந்தான் கண்மாயில் உள்ள திறந்த வெளி கிணறுகள் மற்றும் சிலமனேரி கண்மாய் கரை அருகில் உள்ள தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கும், செட்டியார்பட்டி பேரூராட்சியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.8.77 கோடி மதிப்பீட்டில் கூடுதல் குடிநீர் திட்டம் மற்றும் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் சாஸ்தா கோவில் தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு வழங்கும் திட்டப்பணிக்கு என மொத்தம் ரூ.13 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.

கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் தொகுதியின் வளர்ச்சிக்காக எந்த திட்டம் கேட்டாலும் அதனை நிறைவேற்றி தருகிறார். அதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியின் வளர்ச்சி திட்டப்பணிகளை கொண்டு வருவதில் தாங்கள் உறுதுணையாக இருந்து வருகிறோம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர்கள் சந்திரகலா, உஷாகிரேஸி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், துணை சேர்மன்கள் துரைகற்பகராஜ், காளீஸ்வரி மாரிச்செல்வம், பேரூர் மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், அணிகள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ராஜபாளையம் தொகுதியில் ரூ.13 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: