மகாராஷ்டிராவில் இழுபறி; ஷிண்டே, அஜித்பவாரிடம் அமித்ஷா பஞ்சாயத்து

மும்பை: மகாராஷ்டிரா பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி குறித்து அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ அணியுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளன. கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மும்பை சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் பாஜ மட்டும் 30 இடங்களுக்கு மேல் போட்டியிட விரும்புவதால் அஜித் பவார், ஷிண்டே அணிகள் விட்டுக்கொடுக்க மறுப்பதாலும் பிரச்னை உருவானதாக தெரிகிறது. நேற்று அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் எந்தவித முடிவும் ஏற்படவில்லை. இதனால் அமித்ஷா அதிருப்தியுடன் டெல்லி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஜூஜனதா தளத்துடன் பா.ஜ கூட்டணியா?
ஒடிசா மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒடிசா பாஜ தலைவர்கள் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மற்றும் பா.ஜ கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளும், 147 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. 2019ல் பிஜூ ஜனதா தளம் 12 எம்பி தொகுதி 112 சட்டப்பேரவை தொகுதிகளில் ெவன்றது. பாஜ 8 எம்பி தொகுதிகளையும், 23 சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றது

The post மகாராஷ்டிராவில் இழுபறி; ஷிண்டே, அஜித்பவாரிடம் அமித்ஷா பஞ்சாயத்து appeared first on Dinakaran.

Related Stories: