மணலி சிபிசிஎல் தொழிற்சாலையில் பாதுகாப்பு வாரவிழா கொண்டாட்டம்

சென்னை: மணலியில் உள்ள சென்னை, பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு வாரவிழா நேற்று நடந்தது. விழாவில் பொதுமேலாளர் மனோவா ஜீவதாஸ் வரவேற்றார். தலைமை பொதுமேலாளர் பாதுகாப்பு உறுதிமொழி வாசித்தார். தொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி ஏ்ற்றனர். துணை பொது மேலாளர் சிபிசிஎல் தொழிற்சாலை பாதுகாப்பு அறிக்கையை வாசித்தார்.

மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், இணை இயக்குநர் கார்த்திகேயன் இந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு குழுமத்தின் கருப்பொருளான பாதுகாப்பு தலைமையை மையப்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிர்வாகத்தில் சிறப்படைவோம் என்றார்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் செந்தில்குமார் பேசுகையில், ‘‘விபத்தில்லாத தமிழகம் என்ற இலக்கை அடைய அனைவரும் உறுதி ஏற்போம்’’ என்றார். செயல் இயக்குநர் கண்ணன் பேசுகையில், ‘‘சிபிசிஎல் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள்நடத்தப்படுகிறது. பாதுகாப்பை ஒரு தனிமனித கலாச்சாரமாகவே எடுத்து செல்ல வேண்டும்’’ என்றார்.

முன்னதாக, சிபிசிஎல் தொழிற்சாலைமேலாண் இயக்குநர் செய்தியை, தலைமை பொதுமேலாளர் காந்த் வாசித்தார். தொழிற்சாலையில் விபத்துகள் ஏற்படா வண்ணம் செயல்பட்டமைக்காகவும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது. பொதுமேலாளர் கிஷோர் பாபு நன்றி கூறினார்.

The post மணலி சிபிசிஎல் தொழிற்சாலையில் பாதுகாப்பு வாரவிழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: