மகா சிவராத்திரி.. கோவை வெள்ளியங்கிரி மலைக்கு படையெடுத்த பக்தர்கள்: இதுவரை 40,000 பக்தர்கள் மலையேறியுள்ளதாக தகவல்!!

கோவை: சிவராத்திரிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் கோயில் வெள்ளியங்கிரி மலைக்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு தென் கய்லாயம் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாசிவராத்திரி கொண்டாட்டம் வெள்ளியங்கிரி மலையில் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்களும் இந்த மலைக்கு வருகை தருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மார்க் 8ம் தேதி சிவராத்திரி கொண்டாட இருக்கும் நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதுவரை வெள்ளையங்கிரி மலைக்கு 40000 பேர் மலையேறி உள்ளனர். கடந்த ஆண்டு இரண்டு லட்சம் பக்தர்கள் மலையேறி நிலையில்,இந்த ஆண்டு மூன்று லட்சம் பேர் வரை மலையேறலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பக்தர்களுக்கு குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி மற்றும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post மகா சிவராத்திரி.. கோவை வெள்ளியங்கிரி மலைக்கு படையெடுத்த பக்தர்கள்: இதுவரை 40,000 பக்தர்கள் மலையேறியுள்ளதாக தகவல்!! appeared first on Dinakaran.

Related Stories: