யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது: அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநரின் கருத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்

சென்னை: அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநரின் கருத்துக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பங்கேற்று நுாலை வெளியிட்டு பேசியதில், அய்யா வைகுண்ட நாராயணரின் அவதாரம் தோன்றிய சமூக கலாச்சார காலக்கட்டத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சனாதன தர்மத்துக்கு ஊறு ஏற்படும்போது கடவுள் நாரயணன் அவதாரம் எடுக்கிறார். அப்படியான அவதாரமாக வைகுண்டர் 192 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். ராமேசுவரம், காசி ஆகியவை நாட்டுக்கு பொதுவானவை என்று பேசியிருந்தார். இத்தகைய ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநரின் கருத்துக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது. சனாதனத்தை காக்க வந்தவர் வைகுண்டர் என்று ஆளுநர் கூறியதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.

The post யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது: அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநரின் கருத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: