ஊத்துக்கோட்டை அருகே அதிமுக பொதுக்கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு ஒன்றியம் கச்சூர் கிராமத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பூண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் பிரசாத் தலைமை தாங்கினார். திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், பூண்டி ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணா, வடக்கு ஒன்றியச் செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கோபால் நாயுடு, ஷேக்தாவுத், ரவி, இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன், திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம், தலைமை பேச்சாளர் அரங்கநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஸ்ரீதர், வக்கில் வேல்முருகன், சுதாகர், மதன்குமார், வேதகிரி உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் மாவட்ட பேரவைச்செயலாளர் சென்சய்யா நன்றி கூறினார்.

The post ஊத்துக்கோட்டை அருகே அதிமுக பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: