முத்துப்பேட்டை, மார்ச் 3: முத்துப்பேட்டை மருதங்காவெளியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், ஓய்வுபெற்ற உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நடராஜன், பேரூராட்சி கவுன்சிலர்கள் லெட்சுமி செல்வம், செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், பள்ளி மேலாண்மை குழு தலைவி தீபிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திருஞானம் உள்ளிட்டோர் பேசினார்கள்.
இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
The post 50 இயந்திரங்கள் மூலம் சம்பா அறுவடை பணி நிறைவு தினமும் மாலையில் படியுங்கள் முத்துப்பேட்டை மருதங்காவெளி அரசு பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.