மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி

 

மயிலாடுதுறை,மார்ச் 2: மயிலாடுதுறை மாவட்டத்தில் மனக்குடி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை வட்டம் மனக்குடி ஊராட்சியில் 5,183 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.24 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கட்டப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார், நகராட்சி ஆணையர் சங்கர் உடன் இருந்தனர்.

The post மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Related Stories: