ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த இளம்பெண் மீட்டு மீண்டும் சேர்த்தனர்

குளச்சல், மார்ச் 1: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பிரவசம் நடந்த நிலையில் பச்சிளம்குழந்தையுடன் தலைமறைவான பெண் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பூங்கா நகரை சேர்ந்தவர் செண்பகராஜ்(24). பாசிமாலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(20). இவருக்கு முதலில் பிறந்த குழந்தை இறந்து விட்டது. இந்நிலையில் 2 வது கர்ப்பமடைந்த கவிதா பிரசவத்திற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 8 மாத குறை பிரசவமாக கடந்த 12 ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையும், கவிதாவும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர். மேலும் கவிதாவுக்கு பிரஷர், சிறுநீரக பிரச்சினை இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் இதற்கு சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்தனர். இந்நிலையில் திடீரென கவிதா குழந்தையுடன் கடந்த 22 ம் தேதி தலைமறைவானார். அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தது.

The post ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த இளம்பெண் மீட்டு மீண்டும் சேர்த்தனர் appeared first on Dinakaran.

Related Stories: