கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம். சிறப்பான வாதங்களை எடுத்து வைத்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுகள்.
நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ மாநில தலைவர்): உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, ஆலையை உடனடியாக அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தாமதமின்றி துவக்க வேண்டும். இதற்காக போராடி உயிர்த் தியாகம் செய்த போராளிகளுக்கு தமிழக அரசு நினைவுத் தூண் அமைத்திட வேண்டும்.
The post உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகிவிட்டது: தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.